நாளை இந்தியா இளைஞர்கள் கையில் என்ற வாசகத்திற்கு ஏற்ப ஒரு நாட்டின் வளர்ச்சியில் இளைஞர்களின் முக்கிய பங்கு என்றால் அது மிகையாகாது. இதை யாராலும் மறுக்க முடியாது. அதன் வகையில் நாட்டின் எதிர்காலமாக கருதப்படும் இளைஞர்களை கொண்டாடும் விதமாக நாடு முழுவதும் சர்வதேச இளைஞர்கள் தினம் கொண்டாடப்படுகிறது.
ஆகஸ்ட் 12-ஆம் தேதி, ஐக்கிய நாடுகள் சபையில் அங்கீகாரம் பெற்ற சர்வதேச இளைஞர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. நாட்டின் வளர்ச்சி மற்றும் அமைதிக்கு முக்கிய பங்கு வகிக்கக் கூடிய இளைஞர்களை ஆக்கபூர்வமான பணிகளில் ஈடுபடுத்த வலியுறுத்துவதே இந்த தினத்தின் முக்கிய நோக்கமாக உள்ளது. இளைஞராக இருப்பதையே ஒரு பெருமையாக கருதும் சூழலில், அனைத்து உதவிகளும் முதலில் இளைஞர்களை தேடுவது இரட்டிப்புப் பெருமையாக உள்ளது. உதவி மனப்பான்மை கொண்ட இளைஞர்கள் பெரும்பாலும் சமூக வலைதளங்களில் மூழ்கி இருப்பதாகவும், பரவலான குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஆனால் அதன் மூலமும் பல்வேறு சாதனைகளை நமது இளைஞர்கள் படைத்துள்ளனர்.
வயதானவர்கள் சொல்வதைக் கேட்டு வந்த இளைஞர்கள், இந்த சொல் மாறி தற்போது இளைஞர்களின் சொல்லை மதிக்கும் பெரியவர்கள் என்ற நிலைக்கு மாறியது மிகப்பெரிய பெருமையாக உள்ளது. பல்வேறு தடைகள், பிரச்சினைகளைத் தாண்டி அனைத்து துறைகளிலுமே இளைஞர்கள் அவர்களுக்கென்று தனி முத்திரையை பதித்து வருகிறார்கள்.பல்வேறு சாதனைகளை படைத்து வரும், படைக்கப்போகும் இளைஞர்களுக்கு ஊக்கம் எனப்படும் ஒரு உந்து சக்தி தேவைப்படுகிறது. தடைகளை உடைத் ஏறிய தயாராக உள்ள இளைஞர்களை, ஊக்குவிக்க வேண்டியது பெற்றோர்கள் மட்டுமல்லாது அரசும் தனிக்கவனம் செலுத்தினால், இளைஞர்கள் அவர்கள் நினைக்கும் உச்சத்தை எளிதில் அடைய முடியும்.