கேரள மாநிலத்தில் உள்ள மூணாறு நிலச்சரிவில் சிக்கி பலியானோரின் எண்ணிக்கை தற்போது வரை 51 ஆக உயர்ந்துள்ளது.
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள மூணாறு அருகே அமைந்துள்ள ராஜமாலை பகுதியில் இருக்கும் கண்ணன் தேயிலை தோட்டத்தில் கனமழையால் திடீர் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் அப்பகுதி தொழிலாளர் குடியிருப்பில் வசித்து வந்த 82-க்கும் அதிகமான தொழிலாளர்கள் நிலச்சரிவில் சிக்கினர்.
நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் தேசிய பேரிடர் மீட்புப் படையினருடன், மாநில காவல்துறையினரும், தீயணைப்பு வீரர்களும் ஈடுபட்டு வருகின்றனர். 4வது நாளான நேற்றைய நிலவரபடி மீட்புப் பணியில் மொத்தம் 49 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. ஐந்தாவது மீட்புப்பணியான இன்று மேலும் இரண்டு சடலங்கள் மீட்கப்பட்டுள்ளது. இதனால் தற்போது வரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 51 ஆக உயர்ந்துள்ளது.