பிரித்தானியாவில் கொரோனாவால் பண நெருக்கடியில் சிக்கியுள்ள சில மாணவிகள் தங்கள் ஆடைகளை விற்பனை செய்து வாடகை செலுத்தி வருகின்றனர்.
பிரித்தானியாவில் கடந்த ஏப்ரல் மாதத்திலிருந்து 2 வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் மாணவர்கள் சிலர் உதவித்தொகை கோரி விண்ணப்பித்து வந்தனர். மேலும் சில மாணவர்கள் தாங்கள் அல்லது தங்களின் பெற்றோர்கள் வேலையை இழந்து விட்டதாக பல்கலைக்கழகத்தில் கூறியுள்ளனர். ரோவன் மடோக்(19) என்ற மாணவி கார்டிப் நகரில் 60 முறை வேலை கேட்டு மனு அளித்த போதிலும் ஏற்றுக் கொள்ளப்படவில்லை . தற்போது தாம் தங்கியிருக்கின்ற மாணவர்களுக்கான இல்லத்தில் வாடகை செலுத்த இயலாத சூழல் உருவாகியுள்ளதாக கூறியுள்ளார். பல்வேறு நிறுவனங்கள் தான் அளித்துள்ள மனுவுக்கு எந்த பதிலையும் கூறவில்லை என்று ரோவன் கூறியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து அவர் கூறுகையில், “தற்போதுள்ள பணப்பிரச்சனை தீர்வதற்கு தமது உடைகளை அலைபேசி மூலமாக விற்பனை செய்து பணம் திரட்டி வருகிறேன். எனக்கு மிகவும் பிடித்தமான பொருட்களை விற்பனை செய்வதில் விருப்பமில்லை. ஆனாலும் வேறு வழி இல்லாமல் இதனை செய்து வருகிறேன். அடுத்த மாதம் செலுத்தவேண்டிய வாடகை கட்டணமான 400 டாலர்களில் தற்போது 50 டாலர்கள் மட்டுமே சேர்த்துள்ளேன். நான் மட்டுமல்லாமல், என்னுடன் சம வயதுடைய பல்வேறு மாணவிகளும் தங்களின் பணம் தேவைகளுக்காக இதுபோன்ற செயல்களை தான் செய்து வருகிறார்கள். எனது தந்தை வேலை இல்லாமல் இருப்பதால், அவரிடம் என்னால் உதவி கேட்க முடியவில்லை. அதனால் எனது அனைத்து தேவைகளுக்கான தொகையையும் இனி நானே தேடிக்கொள்ள வேண்டும்” என்று அவர் கூறியுள்ளார்.