Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

தற்கொலை செய்துகொண்ட மனைவி… தாங்க முடியாமல் கணவர் எடுத்த சோக முடிவு..!!

ஆம்பூர் அருகே மனைவி இறந்ததை தாங்க முடியாத கணவர் ரயிலில் தலை வைத்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்துள்ள நாச்சியர்குப்பம் பகுதியைச் சேர்ந்த 34 வயதுடைய ராஜேஷ் என்பவர் ஆம்பூரில் உள்ள தனியார் காலணி தொழிற்சாலையில் பணியாற்றி வருகிறார்.. திருமணமான இவருக்கு சசிகலா (33) என்ற மனைவியும், மேனேஷ் (5) என்ற ஆண் குழந்தையும் இருந்தது.. இந்த சூழலில் சசிகலா கடந்த ஆகஸ்ட் 6 ஆம் தேதி குடும்ப பிரச்னையின் காரணமாக வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இந்நிலையில் மனைவி இறந்த துக்கம் தாங்க முடியாமல் மிகுந்த மன வேதனையில் இருந்த ராஜேஷ் நேற்று மாலை கண்ணடிகுப்பம் ரயில்வே தண்டவாளம் அருகே தனதுபைக்கை  நிறுத்தி விட்டு அதிகளவு மது குடித்துவிட்டு பெங்களூரு – சென்னை ரயில்வே மார்க்கத்திலுள்ள தண்டவாளத்தில் தலையை வைத்து தற்கொலை செய்துகொண்டார்.

இதையடுத்து இன்று காலை அந்தவழியாக சென்ற அப்பகுதியைச் சேர்ந்த சிலர் ரயிலில் சிக்கி தலை துண்டான நிலையில் ஒருவர் உடல் கிடப்பதாக ஜோலார்பேட்டை ரயில்வே காவல் துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ஜோலார்பேட்டை ரயில்வே போலீசார்  உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்தசம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |