நியூசிலாந்தில் 102 நாட்களுக்குப் பின்னர் தற்போது புதிதாக ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் இருந்து நியூசிலாந்து நாட்டிற்கு 20 வயதுடைய நபர் ஒருவர் கடந்த ஜூலை 30ஆம் தேதி வந்திருக்கிறார். அவர் வந்தடைந்த மூன்று நாட்களுக்குப் பின்னர் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதன் முடிவில் அவருக்கு கொரோனா இல்லை என்று வெளிவந்தது. ஆனால் அதன் பிறகு 9 நாட்களுக்குப் பின்னர் மீண்டும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதன் முடிவில் அவருக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்ட நிலையில், ஆங்லாந்தில் உள்ள கொரோனா சிகிச்சை மையத்திற்கு அழைத்து செல்லப்பட்டார்.அதனால் நியூசிலாந்தில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,220 ஆக அதிகரித்துள்ளது.
இவர்களில் யாரும் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நிலையில் இல்லை. நியூசிலாந்தில் கொரோனாவிற்கு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 22 ஆக உயர்ந்துள்ளது. தற்போது வரை 22 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர் என சுகாதாரத்துறை பொது இயக்குனர் ஆஷ்லே பிளும்பீல்டு கூறியுள்ளார். நியூசிலாந்து நாடு கொரோனாவில் இருந்து முழுவதுமாக விடுபட்டுவிட்டது என்று அந்நாட்டின் பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் கூறியிருந்த நிலையில், 102 நாட்களுக்குப் பின்னர் தற்போது ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளனர்.