Categories
உலக செய்திகள்

கொரோனா பாதிப்பு 14% குறைவு… அமெரிக்க அதிபர் தகவல்…!!!

அமெரிக்காவில் கடந்த 7 நாட்களில் மட்டும் கொரோனா பாதிப்பு 14 சதவீதம் குறைந்துள்ளதாக அமெரிக்க அதிபர் கூறியுள்ளார்.

கொரோனாவால் அதிகம் பாதிப்படைந்துள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தில் இருக்கின்றது. அந்நாட்டில் 50 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது வரை 1.6 லட்சத்திற்கும் மேலானோர் உயிரிழந்துள்ளனர்.மேலும் 27 லட்சம் பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர். கொரோனாவுக்கு தடுப்பு மருந்து கண்டறியும் முயற்சியில் அமெரிக்கா தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இந்த முயற்சியில் ஆசிய மற்றும் ஐரோப்பிய நாடுகளும் களமிறங்கியுள்ளன. இருந்தாலும் இந்த முயற்சியில் பெரிய அளவில் முன்னேற்றம் எதுவும் ஏற்படவில்லை. இந்த வருடம் நவம்பர் மாதத்தில் அமெரிக்காவின் அதிபர் தேர்தல் நடைபெற இருக்கிறது.

இந்த நிலையில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் செய்தியாளர்களிடம் கூறுகையில், “இந்த வருடத்தின் இறுதிக்குள் கொரோனாவிற்கான தடுப்பு மருந்து எங்களிடம் இருக்கும் என நான் உறுதியாக நம்புகிறேன். அது கிடைத்தவுடன் அனைவருக்கும் கட்டாயம் வழங்கப்படும். கடந்த 7 நாட்களில் நாடு முழுவதும் தொடர்ச்சியாக பரவிக் கொண்டிருக்கும் கொரோனா பாதிப்பை நாங்கள் காண்கிறோம். அமெரிக்காவில் கடந்த 7 நாட்களில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 14 சதவீதம் குறைந்துள்ளது. இதேபோன்று மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கையும் 7 சதவீதம் குறைந்திருக்கிறது. உயிர் இறப்பு விகிதமும் 9 சதவீதம் குறைந்துள்ளது” என்று அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |