அமெரிக்காவில் மனைவி திடீரென உயிரிழந்ததால் இறுதி சடங்குக்கு பணமில்லாமல் தவித்த கணவருக்கு தக்க சமயத்தில் உதவி கிடைத்துள்ளது.
அமெரிக்காவில் டெக்சாஸ் நகரில் Frank Garcia என்பவர், தனது மனைவி Eugenia Lynn Singleton-யுடன் வசித்து வருகிறார். கடந்த மாதம் 14ஆம் தேதி காலையில் தூங்கி எழுந்த Eugenia தனது கணவருடன் மகிழ்ச்சியாக சிரித்து பேசிக் கொண்டிருந்தார். அப்போது அவருக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. அதனைக் கண்டு பதறிய அவரின் கணவர் அவசர உதவி எண்ணுக்கு தொடர்பு கொண்டுள்ளார். உடனடியாக அங்கு வந்த மருத்துவம் ஊழியர்கள் Eugenia-ஐ மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் மருத்துவமனையில் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் மாரடைப்பால் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக கூறியுள்ளனர். அதனை அறிந்த Frank பெரும் அதிர்ச்சி அடைந்தார். அதன் பின்னர் மனைவிக்கு இறுதி சடங்கு செய்வதற்கு அவரிடம் போதிய பணம் இல்லை.
அதனால் என்ன செய்வதென்று தெரியாமல் அவர் ஆன்லைன் மூலமாக பணம் வசூல் செய்ய தொடங்கியுள்ளார். அவரின் நிலையை அறிந்த சிலர் உடனடியாக அவருக்கு ஆச்சரியம் அளிக்கும் வகையில் 5 ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்து உதவியுள்ளனர். அதன்பிறகு தனது மனைவிக்கு Frank இறுதி சடங்கு செய்துள்ளார். இதுபற்றி அவர் கூறும்போது, “என் மனைவியை இழந்து கஷ்டத்தில் இருந்த போது தேவதைகள் என் பக்கம் வந்து உதவினார்கள் என்றே நான் கூறுவேன். நான் எதிர்பார்க்காத சமயத்தில் உடனடியாக எனக்கு பணம் கிடைத்தது. அதன் மூலமாக நம்மைச் சுற்றியும் உலகில் நல்ல மனிதர்கள் இருக்கிறார்கள் என்பதை நான் உணர்ந்தேன். அதாவது நமக்கு உதவி தேவைப்படும்போது முக்கியமான நேரத்தில் நமக்கு உதவி செய்யும் தேவதூதர்கள் இன்னும் உலகில் இருக்கிறார்கள். எனக்கு உதவியவர்களுக்கு மிக நன்றி” என்று அவர் கூறியுள்ளார்.