Categories
தேசிய செய்திகள்

கேரள விமான விபத்து… உதவி எண்கள் வெளியீடு… ஏர் இந்திய எக்ஸ்பிரஸ் நிறுவனம்…!!

விமான விபத்தில் பாதிக்கப்பட்ட பயணிகளின் உறவினர்கள் தொடர்பு கொள்ளும் வகையில் ஏர் இந்தியா நிறுவனம் உதவி எண்களை வெளியிட்டுள்ளது.

வந்தேபாரத் திட்டத்தின் மூலம்  துபாயில் இருந்து கேரள மாநிலம் கோழிக்கோடு கரிப்பூர் விமான நிலையத்திற்கு சென்ற வெள்ளிக்கிழமை இரவு ஏர் இந்தியாவின் ஐ.எக்ஸ் 1344 விமானம் வந்தது. அந்த விமானத்தில் 10 குழந்தைகள், 2 விமானிகள், ஐந்து பணிப்பெண்கள் உள்பட மொத்தம் 190 பேர் பயணம் செய்தனர். விமானம் கரிப்பூர் விமான நிலையத்தில் தரையிறங்கும் நேரத்தில் ஓடுதளத்தில் இருந்து சறுக்கியபடி சென்று பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 19 பேர் உயிரிழந்த நிலையில் 100க்கும் மேலானோர் படுகாயமடைந்தனர்.

இந்நிலையில், விமானத்தில் பயணித்த பயணிகளின் உறவினர்கள் தொடர்பு கொள்வதற்கான உதவி எண்களை ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ளது.
அந்த எண்கள் பின்வருமாறு:
0483 2719321, 0483 2719318, 0483 2719493, இந்த எண்களை பயன்படுத்தி கோழிக்கோடு சர்வதேச விமான நிலையத்துடன் தொடர்பு கொள்ள முடியும் என ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Categories

Tech |