உலக நாடுகளை உலுக்கிக் கொண்டிருக்கும் கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசி பரிசோதனையை ரஷ்யா தொடங்கியுள்ளது.
உலகம் முழுவதும் பரவிக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸின் தாக்கத்திற்கு தற்போது வரை இரண்டு மில்லியனுக்கும் மேலான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவிற்கு எதிராக தடுப்பு ஊசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. அதில் முதல் தடுப்பூசியை கண்டறிந்துள்ள ரஷ்யா, தற்போது அதற்கான பரிச்சோதனையை தொடங்கியுள்ளது.
அந்நாட்டின் அதிபர் தனது சொந்த மக்களுக்கு தடுப்பு ஊசியை செலுத்தி முதற்கட்ட பரிசோதனையை தொடங்கி வைத்திருக்கிறார். கொரோனாவிற்கு ஒரு சிறந்த தடுப்பூசியை ரஷ்யா கண்டறிந்துள்ளதாக அதிபர் புதின் பெருமிதம் கூறியுள்ளார்.