பூர்வீக சொத்தில் பெண்களுக்கு சம உரிமை உண்டு என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வரவேற்றுள்ளார்.
பெண்களுக்கு பூர்வீக சொத்து உரிமையும் சமபங்கு வழங்க வேண்டுமென டெல்லி உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டிருந்தது. அந்த வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அந்த விசாரணையில், 2005 இந்து சொத்துரிமை திருத்த சட்டத்தின் கீழ், ஆண் பிள்ளைகளுக்கு வழங்குவது போல பெண் பிள்ளைகளுக்கும் பூர்வீக சொத்தில் சமபங்கு வழங்க வேண்டும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
இதுபற்றி துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “சமூக நீதியை நிலைநாட்டம் விதமாக, உச்சநீதிமன்றம், பூர்வீக சொத்தில் ஆண்களுக்கு நிகரான பெண்களுக்கும் சம உரிமை உண்டு என்ற தீர்ப்பை நான் மனதார வரவேற்கிறேன். இந்த தீர்ப்பு, சமூக நீதியை நிலைநாட்டுவதுடன், பெண்களின் முன்னேற்றத்திற்கும் வலு சேர்ப்பதாக அமையும்” என்று பதிவிட்டுள்ளார்.
சமூகநீதியை நிலைநாட்டும் வகையில், உச்ச நீதிமன்றம் "பூர்வீக சொத்தில் ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கும் சம உரிமை உண்டு" என்று வழங்கியுள்ள தீர்ப்பினை மனதார வரவேற்கிறேன்.
இத்தீர்ப்பால், சமூகநீதி நிலைநாட்டப்பட்டதுடன், பெண்கள் முன்னேற்றத்திற்கு இது மேலும் வலுசேர்ப்பதாக அமையும்.
— O Panneerselvam (@OfficeOfOPS) August 11, 2020