காஞ்சிபுரத்தில் இன்று ஒரே நாளில் மட்டும் 322 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 12,453 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது. இருந்தாலும் குடமடைந்தவர்களின் எண்ணிக்கை சற்று உயர்ந்துள்ளது. தமிழகத்திலுள்ள மற்ற மாவட்டங்களை காட்டிலும் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு மிக அதிகமாக உள்ளது.
இந்த நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் மட்டும் 322 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 12,453 ஆக உயர்ந்துள்ளது.