Categories
தேசிய செய்திகள்

தினமும் 7 மணி நேரம்… கொரோனா பரிசோதனை… பெங்களூர் தென்மண்டல மாநகராட்சி அறிவிப்பு…!!

பெங்களூர் தென்மண்டலத்தில் கொரோனா பரிசோதனை தினமும் 7 மணி நேரம் மேற்கொள்ள இருப்பதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

பெங்களூரு மாநகராட்சிக்கு உட்பட்டு 198 வார்டுகள் இயங்கி வருகின்றன. இந்த வார்டுகள் 8 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு இருக்கின்றன. இந்நிலையில் பெங்களூருவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் 8 மண்டலங்களிலும் கொரோனா பரிசோதனையை தீவிரப்படுத்த மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இந்த நிலையில் பெங்களூரு தென் மண்டலத்தில் இருக்கும் 44 வார்டுகளில் கொரோனா பரிசோதனையை அதிகப்படுத்த அந்த மண்டல பொறுப்பு அமைச்சர் ஆர்.அசோக் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருந்தார்.

அதன்படி தெற்கு மண்டலத்தில் இருக்கும் வார்டுகளில் தினம்தோறும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை 7 மணி நேரம் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது. தென் மண்டலத்தில் வசிக்கும் மக்கள் கொரோனா பரிசோதனை செய்து கொள்ள 8431816718 இந்த உதவி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்று மாநகராட்சி தெரிவித்துள்ளது.

Categories

Tech |