Categories
சினிமா தமிழ் சினிமா

ஓடிடியில் நீக்கப்பட்ட சூர்யாவின் படம்…. ரசிகர்கள் தான் காரணமா…!!

நடிகர் சூர்யாவின் நடிப்பில் வெளியான 24 படம் அடுக்கடுக்கான புகார்களால் ஓடிடி தளத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளது.

விக்ரம் குமார் தெலுங்கில் “மனம்” என்ற வெற்றிப் படத்தை இயக்கியவர் தமிழில் சூர்யாவின் நடிப்பில் “24” என்ற படத்தை இயக்கினார். கடந்த 2016ஆம் ஆண்டு வெளியான இப்படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக சமந்தா மற்றும் நித்யா மேனன் நடித்திருந்தனர். சூர்யாவின் 2d நிறுவனத்தின் பிரம்மாண்ட தயாரிப்பில் உருவான இப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்ப்பை பெற்றது. மேலும் சிறந்த ஒளிப்பதிவு மற்றும் சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு  என இரண்டு தேசிய விருதுகள் இப்படத்திற்கு கிடைத்தது.

24 (2016) | 24 Movie | 24 (Surya 24 Tamil Movie) Tamil Movie Cast ...

கொரோனா ஊரடங்கு காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டதால் பொழுதுபோக்கிற்காக மக்கள் ஓடிடி தளத்தில் ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்த வகையில் கடந்த மாதம் சூர்யாவின் “24” திரைப்படம் ஓடிடியில் வெளியானது. ஆனால் வெளியிடப்பட்ட நாளிலிருந்து இப்படத்தை தேடிப் பார்த்ததில் சிக்கல்கள் இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. மேலும் இந்தப்படத்தின் ஆடியோ குவாலிட்டி சரியாக இல்லை என ரசிகர்கள் புகார் அளித்துள்ளனர். இதையடுத்து ஓடிடி தளத்திலிருந்து சூர்யாவின் 24 என்ற படத்தை நீக்கியுள்ளனர். தொழில்நுட்பம் தொடர்பான அனைத்து பிரச்சனைகளையும் சரி செய்து விட்டு படத்தை மீண்டும் ஓடிடியில் பதிவேற்றலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |