நாடு முழுவதும் கொரோனா ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை அமலில் இருக்கும் இந்த ஊரடங்கு உத்தரவில் பல்வேறு தளர்வுகள் விதிக்கப்பட்டுள்ளன. மேலும் மாநிலங்கள் அதற்கு தகுந்தார்போல் தளர்வுகளை அறிவித்துக் கொள்ளலாம் என்று முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இ-பாஸ் நடைமுறை நாடு முழுவதும் ரத்து செய்யப்பட்டாலும், மாநில அளவில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் தற்போது ரயில்வே துறை சார்பில் முக்கிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. நாடு முழுவதும் மறு அறிவிப்பு வரும் வரை பயணிகள் ரயில் மற்றும் புறநகர் ரயில் சேவையை நிறுத்தப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. தற்போது இயக்கப்பட்டு வரும் 230 சிறப்பு ரயில்கள் மட்டும் தொடர்ந்து இயக்கப்படும். மாநில அரசு அனுமதி அளிக்கப்பட்ட இடங்களில் மும்பை புறநகர் ரயில்சேவை வழக்கம்போல் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.