இந்திய தர மதிப்பீட்டின் அடிப்படையில் புதிய ஹெல்மெட்டுகள் தயாரிக்க வேண்டும் என்று மத்திய போக்குவரத்துத்துறை உத்தரவிட்டுள்ளது.
ஒரு ஹெல்மெட் அதிகபட்சம் 1 கிலோ 200 கிராம் இருக்க வேண்டும் என 2018ம் ஆண்டு மத்திய அரசு பரிந்துரை செய்திருந்தது. ஆனால் தற்போது, ஹெட்மெட் தயாரிக்க பயன்படுத்தப்படும் சாதாரணமான உலோக பொருட்களை வைத்து, குறிப்பிட்ட எடைக்கு குறைந்து ஹெட்மெட்டுகளை தயாரிக்க முடியாது என தயாரிப்பாளர்கள் கூறுகின்றனர்.
கார்பன் இழை போன்ற உயர் தரத்தில் செய்யப்பட்ட பொருட்களை வைத்து மட்டுமே குறைந்த எடை ஹெல்மெட்களை தயாரிக்க இயலும் என கூறப்படுகிறது. இதனால் ஹெல்மெட்டின் விலை உயர வாய்ப்பு இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த புதிய நடைமுறையானது அடுத்தாண்டு மார்ச் 31ம் தேதி அமலுக்கு வர இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.