தமிழகத்திற்கு 15-வது நிதிக்குழு பரிந்துரையின்படி ரூ.135 கோடியை விடுவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உலகம் முழுவதும் பரவிக் கொண்டிருக்கும் கொரோனாவால் அனைத்து நாடுகளும் பெரும் பொருளாதார நெருக்கடியை சந்தித்துள்ளன. அதனால் தமிழகம் உள்ளிட்ட 14 மாநிலங்களுக்கு 15வது நிதிக்குழு பரிந்துரையின் படி ரூ.6,195,08 கோடியை மத்திய அரசு விடுவித்திருக்கிறது. அதில் தமிழகத்திற்கு மட்டும் 355 கோடி ரூபாயை மத்திய அரசு விடுவித்துள்ளது. அவற்றுள் அதிகபட்சமான நிதியாக கேரளாவிற்கு ரூ.1,276 கோடியும், ஹிமாச்சல் பிரதேசத்திற்கு ரூ.952 கோடியும் மத்திய அரசு விடுவித்திருக்கிறது.