Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மிதுன ராசிக்கு…கவலை உண்டாகும்…தனித்திறமையை வெளிப்படும்…!

மிதுன ராசி அன்பர்களே….!   இன்று உங்களின் தனித்திறமையை நீங்கள் வெளிப்படுத்துவீர்கள். தாமதமான பணி இன்று எளிதாக நிறைவேறும். தொழிலில் உற்பத்தி விற்பனை வியத்தகு அளவில் முன்னேற்றத்தைக் கொடுக்கும். புத்திரர்கள் விரும்பிய பொருட்களை வாங்கிக் கொடுப்பீர்கள். இன்று மாணவர்களுக்கு கல்வி பற்றிய கவலை இருந்துக்கொண்டே இருக்கும். வெற்றியை கண்டிப்பாக கொடுக்கும். மனம் அவ்வப்போது அலைபாயும், எல்லோரிடமும் அனுசரித்து பேசுவது ரொம்ப நல்லது.

திடமான மனதுடன் எதையும் செய்யுங்கள். குடும்பத்தாரிடம் அன்பாக நடந்து கொள்ளுங்கள். மிக முக்கியமாக பெரியவர்களிடம் அன்பாகவே நடந்துகொள்ளுங்கள். அவருடைய ஆலோசனை கேட்டுக் கொண்டு முக்கியமான பணியை செய்வது ரொம்ப நல்லது. இன்று காதலர்கள் எப்போதும் போலவே வாக்குவாதங்கள் எதுவும் செய்ய வேண்டாம். பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிக்கவேண்டும். கொடுக்கல்வாங்கல் விஷயங்கள் ஓரளவுதான் சிறப்பை கொடுக்கும்.

பணத்தை வாங்கும்போது நீங்கள் கோபப்படாமல் இருக்க வேண்டும். பழைய பாக்கிகள் வசூல் செய்யும்போது நிதானம் என்பது கண்டிப்பாக வேண்டும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது இளம் சிவப்பு நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. இளம் சிவப்பு நிறம்  உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் ரொம்ப நல்ல படியாகவே நடந்து முடியும்.

அதிர்ஷ்டமான திசை: வடக்கு

அதிர்ஷ்ட எண்: 3 மற்றும் 6

அதிஷ்ட நிறம்: இளம் சிவப்பு மற்றும் நீல நிறம்.

Categories

Tech |