Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

அவங்க ரெண்டு பேர் அப்படி பண்ணிட்டாங்க… நீயாவது பேச்சைக்கேள்… தங்கை செய்த காரியம்.. உயிரை விட்ட தாய் மற்றும் அண்ணன்..!!

சொல்லை மீறி தங்கை காதல் திருமணம் செய்ததால் அண்ணன் தற்கொலை செய்துகொண்ட நிலையில், அவரது தாயும் தற்கொலை செய்துகொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

திருச்சி மாவட்டத்தில் இருக்கும் மண்ணச்சநல்லூர் பகுதியை சேர்ந்தவர்கள் பன்னீர்செல்வம் நீலவதி தம்பதியினர் .இத்தம்பதியினருக்கு பால்ராஜ் மற்றும் சின்னத்துரை என்ற மகன்களும் மீரா, கல்பனா மற்றும் மீனா என மூன்று மகள்களும் இருக்கின்றனர். மூத்த மகனான பால்ராஜ் சென்னையில் எலக்ட்ரீசியன் ஆக பணிபுரிந்து வர இளைய மகன் சின்னதுரை மற்றும் மீனா தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்தனர். மகள்களில் மீரா மற்றும் கல்பனா காதல் திருமணம் செய்துகொண்டு தங்கள் குடும்பத்துடன் உள்ளனர். இதேபோன்று மீனாவும் காதலித்து வந்ததாக தெரியவந்துள்ளது.

இந்நிலையில் ஊரடங்கு காரணமாக சொந்த ஊருக்கு வந்த பால்ராஜ் தங்கையின் காதலை அறிந்து கண்டித்துள்ளார். வீட்டில் ஏற்கனவே இரண்டு பேர் பேச்சை மீறி காதல் திருமணம் செய்து கொண்டனர். நீயாவது பெற்றோர்கள் பார்க்கும் மாப்பிள்ளையை திருமணம் செய்துகொள் என அண்ணன் பால்ராஜ் கண்டித்துள்ளார். ஆனால் சில தினங்களுக்கு முன்பு மீனா வீட்டை விட்டு வெளியேறி காதலித்தவரையே திருமணம் செய்துள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த அண்ணன் பால்ராஜ் அப்பகுதியில் இருந்த மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். நேற்று மாலை அவரது உடல் தகனம் செய்யப்பட்ட நிலையில் மகன் இறந்த துக்கத்தில் இருந்த நீலாவதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதை அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் நீலாவதின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததோடு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |