ஸ்விக்கி நிறுவனம் வாடிக்கையாளர்களுக்காக புதிய திட்டம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது.
தொழில்நுட்பம் வளர்ந்துள்ள இந்த நவீன காலகட்டத்தில், அனைத்துப் பொருட்களையும் வீட்டிலிருந்தபடியே ஆர்டர் செய்து நாம் இருக்கும் இடத்திற்கு வரவழைக்கலாம். இந்த ஆன்லைன் ஷாப்பிங்கில் மளிகை பொருட்கள் மட்டும்தான் இல்லாமல் இருந்தது. ஆனால் அதையும் அமேசான் நிறுவனம் சில நாட்களுக்கு முன்பு அறிமுகபடுத்தியது. ஆனால் இதில் ஷாப்பிங் செய்த பொருள்கள் வீடுவந்து சேர்வதற்கான நேரம் அதிகம்.
தற்போது இதற்கும் ஒருபடி மேலாகச் சென்ற ஸ்விக்கி நிறுவனம் இன்ஸ்டா மார்ட் சேவை என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்படி ஸ்விக்கி மூலம் இனிமேல் அத்தியாவசியமான பொருட்கள் 45 நிமிடத்தில் வீடு வந்து சேரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நகர்ப்புறங்களில் வாழும் வாடிக்கையாளர்களுக்கு காலை 7 மணியிலிருந்து நள்ளிரவு 12 மணி வரை இந்த சேவை வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது.