Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

அடிக்கடி குடி… கண்டித்த பெற்றோர்… மனமுடைந்து உயிரை விட்ட இளைஞர்..!!

மது அருந்துவதை பெற்றோர் கண்டித்ததால் மனமுடைந்த இளைஞர் தூக்குபோட்டு  தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டம் மணப்பாறை எடத்தெரு பகுதியைச் சேர்ந்த வேளாங்கண்ணி என்பவரின் மகன் சோபியாஸ்.. 17 வயதுடைய இவர் தினக் கூலியாக வேலைப் பார்த்ததோடு மட்டுமில்லாமல் தனது நண்பர்களுடன் சேர்ந்து மது குடித்து வந்தார். கடந்த சில மாதங்களாகவே அடிக்கடி மதுகுடித்து விட்டு வீட்டுக்கு வந்ததால் பெற்றோர் கண்டித்து வந்ததாக சொல்லப்படுகிறது.

இதனால் மனதளவில் நொந்து போன சோபியாஸ் நேற்று முன்தினம் இரவு  வீட்டைவிட்டு வெளியே செல்வதாக கூறிச் சென்றார்.. இதையடுத்து, நேற்று காலை காரைமேட்டுப்பட்டி பகுதியிலுள்ள முன்னாள் எம்.எல்.ஏ தோட்டத்தில் உள்ள ஒரு மரத்தில் தூக்கில் சடலமாக தொங்கிய நிலையில் சோபியாஸை கண்ட அந்தப்பகுதி பொதுமக்கள் உடனடியாக போலீசாருக்கு தகவலளித்தனர்.

இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தபோலீசார், சோபியாஸ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தற்கொலைக்கான காரணம் பற்றி பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |