அரபு அமீரகத்தில் ஐபிஎல் 2020 காண சீசன் நடைபெறுவதால் முக்கிய வீரர்கள் பலர் கலந்து கொள்ள வாய்ப்பில்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
மார்ச் மாதம் நடைபெறாவிருந்த 2020 ஐபிஎல் சீசன் தொடர் கொரோனா பாதிப்பு காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. இதையடுத்து இந்தியாவில் கொரோனா பாதிப்பு தற்போதைக்கு குறைய வாய்ப்பில்லை என்பதை உணர்ந்த 2020 ஐபிஎல் சீசன் தொடரை அரபு அமீரகத்தில் வைத்து நடத்த BCCI திட்டமிட்டது. இந்நிலையில் இதற்கான நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வரும் சூழ்நிலையில்,
அரபு அமீரகத்தில் ஐபிஎல் தொடர் இவ்வாண்டு நடப்பதால், சில வெளிநாட்டு வீரர்கள் விளையாடாமல் போகலாம் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது. அவர்களில், ஏபி டி வில்லியர்ஸ், காகிசோ ரபாடா, டேவிட் வார்னர், மாக்ஸ்வல், ஜாஸ் பட்லர், பென் ஸ்டோக்ஸ் , ஜோப்ரா ஆர்ச்சர், இயான் மோர்கன் ஆகியோர் இந்த பட்டியலில் உள்ளனர். இவர்கள் அனைவரும் IPL இல் முக்கிய வீரர்கள் என்பதாலும், திறமையாக விளையாட கூடியவர்கள் என்பதாலும் இந்த வீரர்கள் இல்லாத ஐபிஎல் போரடிக்கும் என ரசிகர்கள் சோகத்துடன் கருத்து தெரிவித்து வருகின்றனர்.