Categories
தேசிய செய்திகள்

வயது தடையில்லை… 11 ஆம் வகுப்பு படிக்க… 53 வயதில் விண்ணப்பித்த கல்வித்துறை அமைச்சர்..!!

கல்வித்துறை அமைச்சர் 53 வயதிலும் 11 ஆம் வகுப்பு படிப்பதற்கு விண்ணப்பித்துள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது

ஜார்கண்ட் மாநிலத்தில் கடந்த 2019 ஆம் வருடம் நடந்த தேர்தலில் விதான் சபா தொகுதியில் வெற்றி பெற்றவர் ஜெகர்நாத். 53 வயதை கடந்த ஜெகர்நாத் ஜார்க்கண்ட் மாநிலத்தின் கல்வித்துறை அமைச்சராக பதவியில் இருந்து வருகிறார். பத்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்திருக்கும் ஜெகர்நாத் கல்வித்துறை அமைச்சராக இருப்பதால் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து விமர்சனம் செய்து வந்துள்ளனர். இந்நிலையில் 25 வருடங்களுக்குப் பிறகு யாரும் எதிர்பாராத வகையில் ஜெகர்நாத் 11 ஆம் வகுப்பு படிக்க விண்ணப்பித்துள்ளார்.

இதற்காக நவாடி பள்ளிக்கு நேரடியாக சென்ற ஜெகர்நாத் மற்ற மாணவர்களுடன் சரி சமமாக வரிசையில் நின்று பதினொன்றாம் வகுப்பிற்கு விண்ணப்பம் கொடுத்துள்ளார். அதோடு கலை பிரிவையும் தான் படிக்க தேர்வு செய்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், “எனது படிப்பை நான் மீண்டும் தொடர்வதற்கு எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களை ஊக்கம் கொடுத்தன. அதோடு பள்ளியில் படிக்கும்போது  தான் மாணவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை தெரிந்து கொள்ள முடியும். இதன் மூலமாக கல்வி கற்பவர்களுக்கு ஏற்ற கொள்கைகளை உருவாக்க முடியும்” எனக் கூறினார்.

மேலும் பள்ளிப் படிப்பையும் அமைச்சர் பணியையும் ஒருசேர எவ்வாறு மேற்கொள்ள முடியும் என கேட்ட செய்தியாளர்களுக்கு பதிலளித்த அவர், “நான் அமைச்சர் பணிகளையும் எனது படிப்பையும் ஒன்றாக நிர்வாகிப்பேன். அதோடு விவசாயத்திற்காக நேரம் ஒதுக்க உள்ளேன். இதற்காக நாளொன்றுக்கு 18 மணி நேரம் கூட வேலை செய்வதற்கு நான் தயார். வயது ஒருபோதும் கல்வி கற்பதற்குத் தடையாகாது எனக் கூறினார். 1995 ஆண்டு பத்தாம் வகுப்பில் வெற்றி பெற்ற ஜெகர்நாத் அதன்பிறகு பாதியிலேயே படிப்பை விட்டுவிட்டு அரசியலில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |