தவறாக நடந்து கொண்ட வாலிபர் குஷ்பு கன்னத்தில் அறைந்ததால் அந்த இடத்தில் பரபரப்பு நிலவியுள்ளது.
2019 நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு 7 கட்டங்களாக நடைபெறுகின்றது. இந்நிலையில் முதற்கட்ட வாக்குப்பதிவு 91 தொகுதிகளில் இன்று நடைபெற்றது. ஆந்திரா, அருணாச்சல பிரதேசம், தெலங்கானா, பீகார், அசாம், சத்தீஸ்கர், ஜம்மு-காஷ்மீர் உள்ளிட்ட மாநிலங்களில் வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் 91 தொகுதிகளில், 1285 பேர் களத்தில் உள்ள நிலையில், இதில் 89 பேர் பெண்கள் உள்ளனர். எல்லா தொகுதிகளிலும் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்று வந்தது.
இந்நிலையில், கர்நாடக மாநிலம் மத்திய பெங்களூரு தொகுதியில், காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து நடிகை குஷ்பு வாக்கு சேகரித்து வந்தார். கூட்டத்தில், பேசிவிட்டு தனது காரில் ஏறுவதற்கு சென்றார். அப்போது, பின்புறமாக வந்த இளைஞர், நடிகை குஷ்புவை தவறாக நடக்க முயன்றதாக கூறப்படுகிறது. அதனால், ஆவேசமடைந்த குஷ்பு, அந்த இளைஞரின் கன்னத்தில் அறைந்துள்ளார், இதனால் அந்த இடத்தில் பரபரப்பு நிலவியது.