ராஜஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழந்து 151 ரன்கள் குவித்துள்ளது
ஐ.பி.எல் 24 வது லீக் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. இப்போட்டி ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் இரவு 8 மணிக்கு தொடங்கியது. இந்நிலையில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் தோனி பந்து வீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக ஜாஸ் பட்லரும், அஜிங்கியே ரஹானேவும் களமிறங்கினர்.இருவரும் நல்ல துவக்கம் கொடுத்தனர். அதன் பின் ரஹானே 14 (11) ரன்னிலும், அதிரடியாக விளையாடிய ஜாஸ் பட்லரும் 23 (10) ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
அதன் பின் வந்த சஞ்சு சாம்சன் 6, த்ருப்பாதி 10, ஸ்டீவ் ஸ்மித் 15, ரியான் பராக் 16 என அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். அதன் பின் ஸ்டோக்ஸ் அவர் பங்குக்கு 28 ரன்களும், எடுத்து ஆட்டமிழந்தார். கடைசியில் ஜோப்ரா ஆர்ச்சர் 13* (12), ஷ்ரேயஸ் கோபால் 19* (7) ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.
இறுதியில் 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழந்து 151 ரன்கள் குவித்தது. சென்னை அணியில் அதிகபட்சமாக தீபக் சாஹர், ஷர்த்துள் தாக்கூர், ஜடேஜா ஆகியோர் 2 விக்கெட்டுகளும், மிச்சேல் சான்ட்னர் 1 விக்கெட்டும் வீழ்த்தினார். இதையடுத்து 152 ரன்கள் இலக்கை நோக்கி சென்னை அணி களமிறங்கி விளையாடி வருகிறது.