Categories
உலக செய்திகள்

ஜி-7 மாநாட்டில் புதிய திருப்பம்… அமெரிக்க அதிபரின் கருத்து…!!!

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுக்குப் பின்னர் ஜி-7 மாநாட்டை நடத்துவதற்கு அதிபர் டிரம்ப் பரிசீலனை செய்துள்ளார்.

உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடுகளின் கூட்டமைப்பாக ஜி-7 மாநாடு அமைந்திருக்கிறது. இதில் கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ளன. இந்த வருடம் நடக்கவிருக்கும் ஜி-7 மாநாட்டை அமெரிக்கா நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளது. கடந்த ஜூன் மாதமே நடக்கவேண்டிய இந்த மாநாடு கொரோனா பரவல் காரணமாக வரும் செப்டம்பர் மாதத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டிருக்கிறது. அதே சமயத்தில் ஜி-7 நாடுகளில் இந்தியா, ரஷ்யா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் இணைக்கப்பட வேண்டும் என்று அமெரிக்க ஜனாதிபதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்நிலையில் அமெரிக்காவில் வருகின்ற நவம்பர் மாதம் நடக்கவுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்குப் பிறகு ஜி-7 மாநாட்டை நடத்துவது பற்றி ஜனாதிபதி டிரம்ப் பரிசீலித்து வருகிறார். இதுபற்றி டிரம்ப் செய்தியாளர்களிடம் கூறும்போது, “தேர்தலுக்குப் பின்னர் ஜி-7 மாநாட்டை நடத்துவதற்கு நான் விரும்புகிறேன். மேலும் அந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக ரஷ்ய அதிபர் புதினுக்கு கட்டாயம் நான் அழைப்பு விடுப்பேன். இந்த மாநாட்டின் முக்கிய காரணியாக ரஷ்யாவை நான் கருதுகிறேன்” என்று அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |