Categories
தேசிய செய்திகள்

100 நாள் வேலை திட்டத்தை விரிவுபடுத்துக – ராகுல்காந்தி

கொரோனா வைரஸினால் வேலைவாய்ப்பின்மை அதிகரித்து உள்ளதால் 100 நாள் வேலை திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும் என திரு. ராகுல்காந்தி வலியுறுத்தியுள்ளார்.

திரு. ராகுல்காந்தி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கொரோனா தொற்று காரணமாக அதிகரித்துள்ள வேலைவாய்ப்பின்மை சரிசெய்ய 100 நாள் வேலை திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும் என பதிவிட்டுள்ளார். கோட் சூட் அணிந்த அரசாங்கத்தால் ஏழைகளின் வலியை உணர முடியுமா எனவும் திரு. ராகுல்காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்த பதிவுடன் 100 நாள் வேலை திட்டத்தின் தேவை அதிகரித்துள்ளதை காட்டும் வரைபடத்தையும் திரு.ராகுல்காந்தி தனது பதிவுடன் இணைத்துள்ளார். 100 நாள் வேலை திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும் என்று ராகுல்காந்தி கேட்டுக் கொண்டுள்ளார்.

Categories

Tech |