தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து கொண்டே இருந்தது. உலக பொருளாதாரத்தில் ஏற்பட்ட சமமற்ற நிலை இதற்க்கு காரணம் என்று முன்பு சொல்லப்பட்டிருந்தது. அதன் பிறகு கொரோனா தாக்கம் ஏற்பட்ட சமயத்தில் விற்பனை இல்லை என்றாலும் தங்கத்தின் விலை நிர்ணயம் என்பது தினமும் அதிகரித்து கொண்டே சென்றது. விலையில் புதிய வரலாற்றை தினம்தோறும் படைத்துக் கொண்டிருந்தது.
அந்த வகையில் வரலாற்றில் எப்போதும் இல்லாத வகையில் தங்கம் ஒரு சவரன் 43 ஆயிரத்தை கடந்து 44ஆயிரத்தை நெருங்கிய தங்கம் கடந்த மூன்று நாட்களாக சரிவை சந்தித்து வந்தது.4ஆவது நாளாக இன்று குறைந்த தங்க விலை சவரனுக்கு 40,104 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இன்று ஒரே நாளில் ஒரு சவரன் தங்கம் 1,832 ரூபாய் குறைந்து விற்பனை செய்யப்படுகிறது.
1 கிராம் ரூ. 229 குறைந்து ரூ. 5,013க்கு விற்பனை செய்யப்படுகின்றது. கடந்த 4 நாட்களில் மட்டும் ஒரு சவரன் தங்கம் ரூ. 2400 வரை குறைந்துள்ளது.