Categories
சேலம் மாவட்ட செய்திகள்

மேச்சேரி அருகே சோகம்… 3 சிறுவர்கள் ஏரியில் மூழ்கி பலி… கதறி அழும் குடும்பத்தினர்..!!

மேச்சேரி அருகே ஏரியில்குளித்து கொண்டிருந்த 3 சிறுவர்கள் நீரில் மூழ்கி இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்திவுள்ளது.

சேலம் மாவட்டம், மேச்சேரி அருகேயுள்ள சொக்கம்பட்டி ஊராட்சியில் இருக்கிறது நாகிரெட்டிபட்டி ஏரி. சுமார் 10 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த ஏரியில் கடந்த வாரம் கன மழை பெய்ததால் மழைநீர் தேங்கியுள்ளது. மேலும், குடிமராமத்து பணிக்காக ஏரியில் ஆங்காங்கே சில இடங்களில் பெரிய பள்ளம் தோண்டப்பட்டிருப்பதால் அவற்றில் தண்ணீர் தேங்கியுள்ளது.

இந்தநிலையில், நேற்று சொக்கம்பட்டி கிராமம் அம்பேத்கர் நகரைச் சேர்ந்த சீனிவாசன் என்பவரின் மகன்கள் ரித்தீஷ் (16), ஹாரிஸ் (17) மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த அய்யனார் என்பவரின் மகன் தர்ஷன் (15) ஆகிய 3 பேரும் நாகிரெட்டிப்பட்டி ஏரியில் ஜாலியாக குளித்துள்ளனர்..

மூன்று பேரும் ஏரியில் குளித்துக்கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக அவர்கள் சேற்றில் சிக்கியுள்ளனர். இதனைப்பார்த்த அருகிலிருந்த கிராம மக்கள், சிறுவர்களை காப்பாற்றுவதற்கு  முயன்றுள்ளனர். ஆனாலும் 3 பேரும் நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தனர்.

இந்தசம்பவம் தொடர்பாக தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மேச்சேரி போலீசார், 3 சிறுவர்களின் உடலையும் மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.. இதனிடையே இறந்தவர்களின் குடும்பத்தினர் சடலத்தை பார்த்து கதறி அழுதனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், தீவிர விசாரணை மேற்கொண்டு  வருகின்றனர். ஒரே கிராமத்தைச் சேர்ந்த 3 சிறுவர்கள் இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்திவுள்ளது.

Categories

Tech |