தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக அதிமுக வேட்பளார் மீது வழக்கு பதிவு செய்தது தமிழகத்தில் பெரும் ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் மக்களவைத் தேர்தல் ஆனது 7 கட்டங்களாக நடைபெற இருக்கிறது இதனை அடுத்து தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 18ம் தேதியன்று சட்டமன்ற இடைத்தேர்தல் உடன் மக்களவை தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தரப்பில் அறிவிக்கப்பட்டது இதனையடுத்து தேர்தலில் போட்டியிட உள்ள அரசியல் கட்சிகள் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்
மக்களவை தேர்தல் வருகின்ற 18-ஆம் தேதி நடைபெற இருக்கிறது . இதனையடுத்து வாக்குப்பதிவுக்கு இன்னும் 7 நாட்கள்மட்டுமே உள்ள நிலையில் தேர்தல் களம் பரபரப்பாக வருகிறது.மேலும் போட்டியிடவுள்ள வேட்பாளர்கள் அவர்களது தொகுதி முழுவதும் மாபெரும் பிரச்சாரப்பயணம் செய்து தீவிரமாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் மதுரை மக்களவை தேர்தல் தொகுதியில் அதிமுக வேட்பாளராக ராஜ்சத்யன் செய்யப்பட்டு போட்டியிடுகிறார். இவர் மதுரை மீனாட்சி அரசு கல்லூரியில் தபால் வாக்குப்பதிவு செய்துகொண்டுஇருந்த காவல்துறையினரிடம்வாக்கு சேகரித்தார்.
இது குறித்து அப்பகுதி தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் காவல்துறையில் புகார் அளித்தனர் புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக ராஜ்சத்யன் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.