Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

5 லட்சம் ரூபாய் மதிப்பிலான குட்கா பறிமுதல்…!!

கிருஷ்ணகிரி அருகே உரிய அனுமதியின்றி வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 5,25000 மதிப்புள்ள குட்காவை காவல்துறையினர் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

உருவரப்பள்ளி காவல் நிலைய போலீசார் கிருஷ்ணகிரி, ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் மந்தார பள்ளி என்னுமிடத்தில் வாகன ஈடுபட்டிருந்தனர். அப்போது பெங்களூரில் இருந்து கிருஷ்ணகிரி நோக்கி வந்த வேன் நிறுத்திய போது, அதன் ஓட்டுனர் வாகனத்தை நிறுத்திவிட்டு தப்பி சென்றுள்ளார்.இதனையடுத்து வாகனத்தை சோதனை செய்த காவல்துறையினர், சுமார்5,25000 ரூபாய் மதிப்புள்ள குட்கா பொருட்கள் இருப்பது தெரிய வந்தது .

இதனையடுத்து வாகனத்தை பறிமுதல் செய்த காவல்துறையினர் தப்பி ஓடிய வேன் ஓட்டுனரை தேடி வருகிறார்கள். விசாரணையில் வாகனத்தின் உரிமையாளர் கும்பகோணத்தை சேர்ந்தவரென்றும், பறிமுதல் செய்யப்பட்ட குட்கா கும்பகோண பகுதிகளுக்கு கடத்தி இருக்கலாம் என காவல்துறை தெரிவித்திருக்கிறது.

Categories

Tech |