Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

கொரோனா நோயாளிகள் தப்பியோட்டம்….பீதியில் தூத்துக்குடி மக்கள்..!!

தூத்துக்குடியில் கொரோனா பாதிக்கப்பட்ட இருவர் தப்பிச் சென்றுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம், சிவத்தையாபுரத்தை  சுற்றியுள்ள பகுதியைச் சேர்ந்த இருவர் கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு அங்குள்ள அரசு மருத்துவமனையில் தனி வார்டில் அனுமதிக்கப்பட்டு  இருந்தனர். அதன்பின் சில நாட்களாக சிகிச்சை பெற்று வந்த இவர்கள் நேற்று(ஆகஸ்ட் .11) கொரோனா வார்டில் இருந்து தப்பிச் சென்றனர்.

இதுகுறித்து சுகாதார அலுவலர்கள் காவலர்களிடம் தெரிவித்த பின் கொரோனா பாதிக்கப்பட்ட இருவரையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இச்சம்பவம் தூத்துக்குடி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |