கிருஷ்ண ஜெயந்தியை ஒட்டி குழந்தைகளுக்கான மாறுவேடப் போட்டிகள் கிருஷ்ணர் ராதை வேடமணிந்து குழந்தைகள் நடனம் ஆடியதை வெகுவாக கவர்ந்தது.
கிருஷ்ண ஜெயந்தியானது இந்தியா முழுவதும் நேற்று கொண்டாடப்பட்டு வந்தது. கொரோனா ஊரடங்கு அமுலில் உள்ள நிலையில், பள்ளிகளில் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டம் தடைபட்ட நிலையில் கிருஷ்ண ஜெயந்தியை ஒட்டி திருச்சியில் வீடுகளில் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டம் சிறப்புடன் நடைபெற்றது.
பள்ளி குழந்தைகளுக்கான மாறுவேடப் போட்டி நேற்று பீமா நகர பகுதியில் நடைபெற்றது. இதில் பள்ளி குழந்தைகள் கிருஷ்ணர் மற்றும் ராதை போன்று அலங்கரித்து கிருஷ்ணரை வலம் வருவதும், பாடலுக்கு நடனம் ஆடியது அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. இதனை ஏராளமானோர் கண்டு ரசித்து மகிழ்ந்தனர்.