நெல்லையில் ஊரடங்கால் வாழ்வாதாரம் இன்றி தவிக்கும் திரையரங்கு தொழிலாளர்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் தங்களுக்கு அரசு பணி வழங்கிட வேண்டும் என்று மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
தமிழகத்தில் ஊரடங்கில் பல்வேறு தலங்களுக்கு அனுமதி அளித்த அரசு திரையரங்குகளுக்கு மட்டும் இன்னும் அனுமதி வழங்கவில்லை. இதனால் நெல்லை மாவட்டத்தில் மட்டும் சுமார் 500க்கும் மேற்பட்ட திரையரங்கு தொழிலாளர்கள் வாழ்வாதாரம் இன்றி தவித்து வருகின்றார்கள். தினசரி உணவிற்கே கஷ்டப்படுவதாக அவர்கள் வேதனை தெரிவித்தனர்.
இதனால் அரசு தங்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் திரையரங்க தொழிலாளிகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் அரசு பணி வழங்கிட வேண்டும் என்று மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.