கடலூரில் பத்தாம் வகுப்பை சேர்ந்த மாணவன் பாஸ் பண்ண வைத்ததற்கு முதல்வருக்கு நன்றி என போஸ்டர் அடித்து மகிழ்ச்சி அடைந்துள்ளார்.
கொரோனா தொற்று பரவலின் காரணமாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவர்களின் நலன் கருதி மூடப்பட்டன. அதுமட்டுமல்லாமல் பள்ளி, கல்லூரி தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்து அனைத்து மாணவ மாணவிகளும் தேர்ச்சி பெற்றதாக பள்ளிக் கல்வித்துறை அறிவித்தது. இதைத்தொடர்ந்து ஆகஸ்ட் 10ஆம் தேதி பத்தாம் வகுப்பு மாணவர்களின் தேர்ச்சி விவரங்கள் வெளியானது. இதில் கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள குறுங்குடி என்ற பகுதியை சேர்ந்த நிஷாந்த் என்ற மாணவன் பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றதை சுவரொட்டி படம் ஒன்றை வடிவமைத்து பேஸ்புக்கில் பதிவேற்றி தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.
அந்த “போஸ்டில் பத்தாம் வகுப்பில் என்னை தேர்ச்சி பெற வைத்து வரலாற்று சாதனை படைத்த ஐயா எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கு நன்றி எனவும். என்னைப் பார்த்து ஏளனமாகச் சிரித்த எனது ஆசிரியர்களுக்கு இந்த வெற்றியை சமர்ப்பணம் செய்கிறேன் எனவும் குறிப்பிட்டிருந்தார்.” மேலும் தனது இரு கைகளையும் தூக்கி கும்பிட்டபடி புகைப்படத்தை வைத்து நன்றி நன்றி நன்றி என சுவரொட்டி படத்தை பேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றம் செய்துள்ளார். இந்நிகழ்வு பொதுமக்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் இதை அதிகமாக பகிர்ந்து வருகின்றனர்