Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

100 அடியை எட்டிய பாபநாசம் அணை …..!!

மேற்கு தொடர்ச்சி மலை நிலப்பரப்பு பகுதிகளில் பெய்த மழையால் 175 நாட்களுக்கு பின் பாபநாசம் அணை 100 அடியை தாண்டியுள்ளது.

நெல்லை மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலையின் பிரதானமான பாபநாசம் அணை, சேர்வலாறு அணை, மணிமுத்தாறு அணை உள்ளிட்ட அணைகள் உள்ளன. தென்மேற்கு பருவமழை காலத்தில் அணைகளுக்கு நீர் வரத்து அதிகம் இருக்கும். இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை ஜூன் இரண்டாம் வாரத்தில் தொடங்கிய நிலையில் போதிய மழை இல்லாமல் இருந்தது. அதனை தொடர்ந்து ஆகஸ்ட் 2ஆம் தேதியில் இருந்து தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்ததை அடுத்து நிலப்பரப்பு பகுதிகளில் மழை அதிகம் பெய்து அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது.

மேலும் 143 அடி நீர்மட்டம் கொண்ட பாபநாசம் அணையில் நீர்மட்டம் 175 நாட்கள் கழித்து நேற்று  100.65 அடியாக உள்ளது. அணைக்கு நீர்வரத்து 3366.23 அடியாகவும், அணையில் இருந்து 804.75 அடை நீரும் வெளியேற்றப்படுகிறது. கடந்த 10 நாட்களாக பெய்த மழையால் அணைகள் நிரம்பியது அடுத்து விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதை அடுத்து விசாரணை சாகுபடிக்கான பணிகளையும் தொடங்கியுள்ளனர்.

Categories

Tech |