நீலகிரி மாவட்டத்தில் கனமழையினால் சேதமடைந்து உயர்மின் கோபுரங்களை மின்சாரத்துறை ஊழியர்கள் சீரமைத்து வருகின்றார்கள்.
நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக சூறைக்காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. நீலகிரி மாவட்டத்திலுள்ள குந்தா, எமரால்ட், அவலாஞ்சி, நடுவட்டம், தேவாலா, கூடலூர் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 260ற்கும் மேற்பட்ட இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்தன. மரங்கள் மின் கம்பங்கள் மற்றும் உயர் மின் கோபுரங்கள் மீது விழுந்துயுள்ளதால் மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டன.
இதனைத்தொடர்ந்து சேதமடைந்து உயர்மின் கோபுரங்களை மின்சாரத் துறை ஊழியர்கள் சீரமைத்து வருகின்றார்கள். இன்னும் ஓரிரு நாட்களில் கிராமப்புறங்களில் தடையில்லா மின் வினியோகம் செய்யப்படும் என மின்வாரியத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.