Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

5 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த இளைஞன்…. போக்சோ சட்டத்தின் கீழ் கைது….!!

5 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த டேவிட்சன் என்ற இளைஞர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

நாமக்கல் மாவட்டத்திலுள்ள தாதம்பட்டி ஈச்சங்காடு புதூர் பகுதியை சேர்ந்த கூலித் தொழிலாளி மற்றும் அவரது மனைவி இருவரும் கூலிவேலைக்கு செல்வதற்கு முன்னதாக தங்களது 5 வயது மகளை அருகில் உள்ள உறவினர்கள் வீட்டில் விட்டு சென்றுள்ளனர். அவர்கள் பணியை முடித்து வீடு திரும்பியபோது மகள் குளியலறையில் அழுது கொண்டிருந்தார்.

என்ன காரணம் என சிறுமியிடம் பெற்றோர் விசாரித்தபோது, வீட்டிற்கு அருகில் வசிக்கும் டேவிட்சன் என்ற இளைஞன் சிறுமியிடம் கொஞ்சி விளையாடி குளியல் அறைக்கு அழைத்து சென்று பாலியல் வன்கொடுமைக்கு முயற்சித்ததாக தெரிவித்துள்ளார். அதன்பின் சிறுமி அழ ஆரம்பிக்கவும் தப்பி ஓடியது தெரிய வந்தது. இதனையடுத்து சிறுமியின் பெற்றோர்கள் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். காவல்துறையினர் புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு போக்சோ சட்டத்தின் கீழ் டேவிட்சனை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

Categories

Tech |