Categories
தேசிய செய்திகள்

ராஜீவ்காந்தி கொலை வழக்கின் விசாரணை முகமை… செயல்பாட்டில் உள்ளதா?.. உயர்நீதிமன்றம் கேள்வி…!!!

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கை விசாரணை செய்ய அமைக்கப்பட்ட பன்முக விசாரணை முகமை செயல்பாட்டில் இருக்கிறதா என்று உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் நளினியின் தாய் ஆட்கொணர்வு மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை வழங்கப்பட்டு எனது மகள் நளினியும் மற்றும் மருமகன் முருகனும் கடந்த 28 வருடங்களாக சிறையில் இருந்து கொண்டிருக்கின்றனர். வேலூர் சிறையில் இருவரும் இருந்து வந்துள்ள நிலையில், சென்றவாரம் முருகனின் தந்தை இலங்கையில் உயிரிழந்தார். இறந்த தனது தந்தையின் உடலை காணொலிக் காட்சி மூலமாக காண அனுமதி வழங்கக் கோரி முருகன் தமிழக அரசிற்கு கோரிக்கை விடுத்திருந்தார்.

ஆனால் தமிழக அரசு அதனை ஏற்க மறுத்து விட்டது. அதனால் இலங்கையிலுள்ள முருகனின் தாயார் சோமனியம்மாளிடம்,லண்டனில் உள்ள அவரது மூத்த சகோதரியிடம் தினமும் 10 நிமிடங்கள் காட்பாடியில் உள்ள காணொளி வசதி மூலமாக பேசுவதற்கு அனுமதிக்க தமிழக அரசு உத்தரவிட வேண்டுமென்று கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்த வழக்கினை நீதிபதிகள் என். கிருபாகரன் மற்றும் வி.எம்.வேலுமணி ஆகியோர் காணொலிக் காட்சி மூலமாக விசாரணை செய்தனர். அப்போது மத்திய அரசு சார்பில், வெளிநாடுகளில் வசித்து வரும் உறவினர்களுடன் இருவரையும் பேசுவதற்கு அனுமதி அளித்தால், ராஜீவ் காந்தி கொலை வழக்கை விசாரிக்கும் பன்முக விசாரணை முகமையின் விசாரணை பாதிப்படையும் என்று கூறியுள்ளனர்.

அந்தக் கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிபதிகள், முருகனின் தந்தை இறப்பு பற்றி தான் இருவரும் பேச போகிறார்களே தவிர அமெரிக்க அதிபர் தேர்தல் குறித்து பேசப் போகிறார்கள் என்று கேலி தனமாக கூறியுள்ளனர். அதேசமயத்தில் 20 வருடங்களுக்கு முன்னர் அமைக்கப்பட்ட பன்முக விசாரணை முகமை தற்போது செயல்பாட்டில் இருக்கிறதா? இல்லை விசாரணைக்காக கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதா? என்பது பற்றி வருகின்ற ஆகஸ்ட் 19 ஆம் தேதிக்குள் பதில் அளிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டு விசாரணையை ஒத்தி வைத்துள்ளனர்.

Categories

Tech |