Categories
உலக செய்திகள்

போலீஸ் வேடமிட்ட மர்ம நபர்கள்… பணத்தை இழந்த பிரிட்டன் மக்கள்…!!!

பிரிட்டனில் லண்டனை சேர்ந்த மர்ம நபர்கள் காவல்துறை அதிகாரிகளைப் போல பொதுமக்களை மிரட்டி பணம் பறித்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

லண்டனை சேர்ந்த மர்ம  நபர்கள் சிலர் காவல்துறை அதிகாரிகளை போன்று காட்டிக்கொண்டு பொதுமக்களை ஏமாற்றி பணம் பறித்து சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது.இதுபோன்று கடந்த மே மாதத்தில் இருந்து ஜூன் மாதம் வரையில் பலரிடம் 37 ஆயிரம் டாலர்கள் வரை ஏமாற்றி பறித்துச் சென்றுள்ளனர். அந்த மர்ம நபர்கள் தங்களை காவல்துறை அதிகாரிகள் போன்று தொலைபேசி மூலமாகவோ அல்லது நேரிலோ பொதுமக்களிடம் கூறியிருக்கின்றனர்.வழக்குத் தொடர்பாக தங்களை விசாரிக்க பணம் அனுப்ப வேண்டும் என்று பொது மக்களை ஏமாற்றி அவர்களிடம் இருந்து பணத்தை வாங்கி இருக்கின்றனர். இந்த மோசடியில் தொடர்புடைய ஒரு நபரின் சிசிடிவி புகைப்படத்தை காவல்துறையினர் வெளியிட்டுள்ளனர்.

அனைத்து மோசடிகளும் அவரே செய்திருப்பார் என்று காவல்துறையினர் கருதுகின்றனர். அந்த நபர் லண்டனை சேர்ந்தவர் எனவும் King cross train station-ல் இருந்து Norfolk-ல் உள்ள Downham Marketக்கு‌ சென்ற மக்களிடம் மோசடியில் ஈடுபட்டு உள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய காவல் துறையினர் கூறுகையில், “அனைவரும் கவனத்தில் கொள்ளுங்கள், காவல் அதிகாரிகள் எந்த சூழலிலும் உங்களின் வங்கிக் கணக்கு விபரங்களை நேரிலோ அல்லது அலைபேசி வாயிலாகவோ கேட்கமாட்டார்கள். அதேபோன்ற விசாரணை தொடர்பாக பணமும் கேட்கமாட்டார்கள். இதுபோன்ற மோசடி நபர்களிடம் யாரும் ஏமாற வேண்டாம். சிசிடிவி புகைப்படத்தில் உள்ள நபர் பற்றி யாருக்காவது தகவல் தெரிந்தால் உடனடியாக காவல்துறையினரை தொடர்பு கொள்ளுங்கள்” என்று கூறியுள்ளனர்.

Categories

Tech |