தமிழகத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறியவர்களிடம் இருந்து இதுவரை 20 கோடியே 25 லட்சத்து 18 ஆயிரம் ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.
கொரோனா ஊரடங்கை மீறியதாக தமிழகம் முழுவதும் கடந்த 140 நாட்களில் 9 லட்சத்து 60 ஆயிரத்து 38 பேரை போலீசார் கைது செய்து ஜாமீனில் விடுவித்துள்ளனர். 8 லட்சத்து 69 ஆயிரத்து 270 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 6 லட்சத்து 78 ஆயிரத்து 326 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறியவர்களிடம் 20 கோடியே 25 லட்சத்து 18 ஆயிரத்து 98 ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளதாக தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது.