மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள குடியரசு முன்னாள் தலைவர் திரு. பிரணாப் முகர்ஜியின் உடல் நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குடியரசு முன்னாள் தலைவர் திரு. பிரணாப் முகர்ஜிக்கு மூளை இரத்த நாளங்களை ஏற்பட்டுள்ள அடைப்பை நீக்குவதற்கான அறுவை சிகிச்சைக்காக டெல்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது. இதையடுத்து கடந்த ஒரு வாரத்தில் தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்திக் கொள்ளும் படி திரு. பிரணாப் முகர்ஜி அறிவுறுத்தியுள்ளார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் அவருக்கு மூளையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதன் பிறகு செயற்கை சுவாசத்துடன் உள்ள அவரை மருத்துவர்கள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். அவரது உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாகவே இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.