சாமியார் நித்யானந்தா தற்போது பேரதிர்ச்சி தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார் .
தமிழ்நாட்டுக்கே தெரிந்த பிரபலமான சாமியார் நித்தியானந்தா சமீபத்தில் கைலாச என்ற தனித் தீவு ஒன்றை உருவாக்கி அதில், தனது பக்தர்களுக்கு குடியுரிமையும் வழங்கி ஜாலியாக கைலாசத்தில் வசித்து வருகிறார். இவருக்கென இருக்கக்கூடிய ஒரு கூட்டமும் அங்கே இருக்கிறது. நாட்கள் செல்லச் செல்ல இந்த கைலாச தீவு குறித்த சில தகவல்கள் வெளியாகி நம்மை அதிர்ச்சிக்குள்ளாக்கும். அந்த வகையில், தற்போது பேரதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
அதன்படி, சாமியார் நித்யானந்தா கைலாச தீவுக்கு நிறைய நன்கொடைகள் கிடைத்துள்ளதால், அவற்றை நல்ல காரியங்களுக்கு செலவிட வாடிகன் வங்கி போன்று ரிசர்வ் பேங்க் ஆப் கைலாசா உருவாக்கியுள்ளேன். உள்நாட்டில் (கைலாசாவிற்குள்) ஒரு கரன்சியும், வெளிநாட்டு பரிவர்த்தனைகளுக்கு மற்றொரு கரன்சியும் அச்சடிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்த அவர், வருகின்ற விநாயகர் சதுர்த்தி அன்று தெளிவான அறிவிப்பை வெளியிடுகிறேன் என அதிரடி கிளப்பியுள்ளார்.