சச்சின் பைலட் ஆதரவாளர்கள் ராஜஸ்தானுக்கு திரும்பி இருக்கின்ற நிலையில் மறப்போம், மன்னிப்போம் என்று அசோக் கெலாட் கூறியுள்ளார்.
ராஜஸ்தான் மாநிலத்தில் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. துணை முதல்வராக சச்சின் பைலட் இருந்துள்ளார். அசோக் கெலாட்டிற்கும் சச்சின் பைலட்டிற்கும் இடையில் பல்வேறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டுள்ளன. அதனால் 18 எம்.எல்.ஏ-க்களுடன் சச்சின் பைலட் போர்க்கொடி தூக்கி இருந்தார்.பிரியங்கா காந்தி பேச்சு வார்த்தை மேற்கொண்ட நிலையிலும் சச்சின் பைலட் சமாதானம் அடையவில்லை. அதனால் அசோக் கெலாட்டிற்கு பெரும் சிக்கல் உண்டாகிறது. சச்சின் பைலட்டை துணை முதல்வர் பதவியில் இருந்து நிரந்தரமாக தூக்கினார். அதே சமயத்தில் சச்சின் பைலட் ஆதரவாளர்கள் வெளிமாநிலத்தில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் தங்கியிருந்தார்கள். இந்நிலையில் அசோக் கெலாட் சட்டசபை கூட்டுவதற்கு பலமுறை கோரிக்கை விடுத்திருந்தார்.இறுதியாக நாளை மறுநாள் சட்டசபை கூட்டுவதற்கு ஆளுநர் ஒப்புதல் வழங்கி இருக்கிறார்.
இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்னர் சச்சின் பைலட் ராகுல் காந்தியை திடீரென சந்தித்துள்ளார். அதன்பிறகு ஆதரவு எம்எல்ஏக்கள் அனைவருடன் சேர்ந்து காங்கிரஸ் கட்சியில் நீடிக்க முடிவு செய்தார். அதனால் ராஜஸ்தான் மாநிலத்தில் நீண்ட நாட்களாக நிலவிக் கொண்டிருந்த அரசியல் நெருக்கடி ஒரு முடிவுக்கு வந்திருக்கிறது.சச்சின் பைலட் ஆதரவாளர்கள் தற்போது ராஜஸ்தான் அணிக்கு திரும்பியுள்ள நிலையில், மறப்போம், மன்னிப்போம் என்ற அசோக் கெலாட் தனது ஆதரவு எம்.எல்.ஏ-க்களிடம் கூறியுள்ளார். இதுபற்றி அசோக் கெலாட் கூறும்போது, “கருத்து வேறுபாடு ஏற்பட்டு அவர்கள் சென்ற பின்னர், உண்மையிலேயே வருத்தம் அடைந்தார்கள்.
அனைவரும் இதில் இருந்து கட்டாயம் கடந்து செல்ல வேண்டும். மறப்போம், மன்னிப்போம். அவர்களிடம் மக்களுக்காகவும், மாநிலங்களும் மற்றும் நாட்டிற்காகவும் பணியாற்றிக் கொண்டிருக்கும்போது சகிப்புத்தன்மை அவசியம் தேவை என்று கூறினேன். தவறுகளை நாம் கட்டாயம் மன்னிக்க வேண்டும். இது ஜனநாயகத்தின் ஆபத்து, 100க்கும் மேலான ஆதரவாளர்கள் என்னுடன் இருக்கிறார்கள். இது ஜனநாயகத்திற்கு எதிரான போர். கர்நாடகா மத்தியபிரதேசத்தில் செய்தது பாரதிய ஜனதா கட்சி செய்ய நினைத்து தோல்வியை சந்தித்திருக்கிறது” என்று அவர் கூறியுள்ளார்.