Categories
சினிமா

65 வயதை கடந்தவர்கள் படப்பிடிப்பில் பங்கேற்க கூடாது… வருத்தம் தெரிவித்த அமிதாப்பச்சன்…!!!

65 வயதுக்கும் மேலானவர்கள் படப்பிடிப்புகளில் பங்கேற்கக் கூடாது என்ற அரசின் நிபந்தனை தனக்கு வருத்தமளிப்பதாக அமிதாப்பச்சன் கூறியுள்ளார்.

கொரோனா காரணமாக சினிமா படப்பிடிப்புகளில் 65 வயதை கடந்தவர்கள் பங்கேற்கக்கூடாது என்று மராட்டிய மாநில அரசு சில நாட்களுக்கு முன் நிபந்தனை விதித்திருந்தது. அந்த நிபந்தனையை எதிர்த்து நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் அரசின் நிபந்தனை ரத்து செய்யப்பட்டு 65 வயதுக்கும் மேலானவர்கள் படபிடிப்பில் பங்கேற்கலாம் என்று தீர்ப்பளித்தது. இது குறித்து அமிதாப் பச்சன் கூறுகையில், “65 வயதுக்கும் மேலானவர்கள் படப்பிடிப்புகளில் பங்கேற்க கூடாது என்று அரசு நிபந்தனை என் மனதை மிகவும் பாதித்துள்ளது. 65 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள் வேலைக்கு செல்லக்கூடாது. அவர்கள் வேலை செய்வதற்கு தகுதி இல்லாதவர்கள் என்று அரசு நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

அப்படி என்றால் என்னைப் போன்ற 78 வயதுக்காரர்கள் சினிமாவை விட்டு வெளியேற வேண்டுமா? இது மிகவும் வருத்தமான முடிவு. இந்தத் தடையை திரைப்படச் சங்கம் நீதிமன்றத்திற்கு கொண்டு சென்றதால் இந்த பிரச்சனை தீர்ந்துவிட்டது.இருந்தாலும் நீதிமன்றம் தடையை நீக்குவதற்கு முன்னர் என்னை போன்றவர்கள் மனரீதியாக எவ்வளவு வருத்தமடைந்திருப்பார்கள்? நாங்கள் சினிமாதான் தொழில் என்று வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நடிப்பை விட்டு நான் வேறு தொழில் செய்வதற்கு ஏதாவது வழி இருந்தால் ஆலோசனை சொல்லுங்கள்” என்று அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |