Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

அபின் கடத்தி கையும், களவுமாக சிக்கிய பாஜக பிரமுகர் ….!!

திருச்சி அருகே போதைப்பொருள் கடத்திய பாரதிய ஜனதா கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் அடைக்கலராஜ் கைது செய்யப்பட்டுள்ளார்.

திருச்சியிலிருந்து மதுரைக்கு அபின் கடத்தப்படுவதாக கிடைத்த தகவலை அடுத்து போதைப்பொருள் தடுப்பு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது காரில் வைத்து கடத்தப்பட்ட அபினை பறிமுதல் செய்த போலீசார் அடைக்கலராஜ் மற்றும் அவரது நண்பரை கைது செய்தனர். அடைக்கலராஜ் பாரத ஜனதா கட்சியின் பெரம்பலூர் மாவட்ட துணைத் தலைவராக இருந்தவர். தற்போது அக்கட்சியின் OVC அணியின் மாநில செயற்குழு உறுப்பினராகவும் இருந்து வருகிறார். இருவரிடமும் நடத்திய விசாரணையில் மற்றொரு காரில் போதை பொருள் கடத்திய  மேலும் மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.

கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 2 கார்கள் பறிமுதல் செய்யப்பட்டன. காரில் கடத்தப்பட்ட போதை பொருளின் மதிப்பு சர்வதேச சந்தையில் 10 லட்சம் ரூபாய் என்றும் ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து தமிழகத்திற்கு கொண்டு வரப்பட்டதாகவும்  கூறப்படுகிறது. பாரதிய ஜனதா கட்சியின் பிரமுகர் போதை பொருள் கடத்தும் போது கையும் களவுமாக சிக்கியிருப்பது திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |