Categories
கரூர் மாவட்ட செய்திகள்

கைக்கெட்டும் உயரத்தில் மின் கம்பிகள்..!!

கரூர் அருகே விவசாய நிலத்தில் கைக்கெட்டும் உயரத்தில் தொங்கும் மின்கம்பிகள் சரிசெய்யாமல் அதிகாரிகள் அலட்சியம் காட்டுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

சோம் ஊரை சேர்ந்த விவசாயி பாலசுப்பிரமணியத்துக்கு 4 ஏக்கர் விளைநிலம் உள்ளது. கடந்த 2018 ல் இந்த நிலத்தின் குறுக்கே அமைக்கப்பட்டுள்ள மின்கம்பம் உடைந்து விழுந்துள்ளது. தொடர்ந்து பழுதை மட்டும் சரி செய்த அதிகாரிகள், மின்கம்பத்தை  மாற்றாமல் சென்றதால் மின் கம்பிகள் தளர்ந்து தாழ்வாக தொங்குகின்றன. இதனால் கரும்பு பயிர் எறிந்துவிட்ட நிலையில், அங்குதொடர்ந்து  விவசாயம் செய்ய முடியாத சூழல் உள்ளது.

இது குறித்து தொடர் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று பாதிக்கப்பட்ட விவசாய வேதனை தெரிவித்துள்ளார். மின்வாரியத்தில் ஆள் பற்றாக்குறை உள்ளதால் விவசாயி இரண்டரை ஆண்டுகளாக அழைக்களிக்கப்படுவதால்குற்றச்சாட்டு எழுந்துள்ளது . உயிரிழப்புகள்  ஏற்படும் முன்னர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயி கோரிக்கை விடுத்துள்ளார்.

Categories

Tech |