Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

வாகனத்திற்கு தீ வைத்த மர்ம நபர்கள் …..!!

விருதுநகரில் மார்க்சஸ் கம்யூனிஸ்ட் கட்சி நகர செயலாளரின் இருசக்கர வாகனத்தை மர்ம நபர்கள் தீ வைத்து எரித்தது, பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பாத்திமா நகரை சேர்ந்த முருகன் என்பவர் மார்க்சஸ் கம்யூனிஸ்ட் நகர செயலாளராக உள்ளார். வழக்கம்போல் வீட்டிற்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த முருகனின் இருசக்கர வாகனத்தில் அதிகாலையில் மர்ம நபர்கள் சிலர் தீ வைத்துவிட்டு தப்பி சென்றனர். சத்தம் கேட்டு வெளியே வந்த அவர் வாகனம் எரிந்து கொண்டிருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து  தீ அணைக்கப்பட்டது. முன்விரோதம் காரணமாக இரு சக்கர வாகனத்திற்கு தீ வைக்கப்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் சிலரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |