புதுவையில் புதிதாக 481 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என அம்மாநில சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியில் இன்றைய நிலவரப்படி கொரோனா பாதிக்கப்பட்டவர்களை பற்றி மல்லாடி கிருஷ்ணாராவ் வெளியிட்ட வீடியோ பதிவில், “புதுச்சேரி மாநிலத்தில் புதிதாக 481 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்றுதான் புதுச்சேரியில் அதிகபட்ச எண்ணிக்கையாகும். மேலும் புதிதாக 5 பேர் தொற்று காரணமாக உயிரிழந்துள்ளனர். இதுவரை கொரோனாவால் 96 பேர் பலியாகியுள்ளனர். 2,616 பேர் அரசு மருத்துவமனைகளில், சிகிச்சை பெற்று வருகின்றனர்.
புதுச்சேரியில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 6, 381 ஆக உள்ளது. இதில், 3,669பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்னும், 621 பேருக்கு சோதனை முடிவுகள் வரவேண்டி இருக்கின்றனர். சென்ற நான்கு நாட்களாக புதுவையில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. இப்பொழுது தமிழ்நாட்டில் வாரம் ஒரு நாள் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. அதேபோன்று புதுச்சேரியிலும் ஊரடங்கு அமல்படுத்தப்படும் என நம்புகிறேன்” என்று அவர் கூறியுள்ளார்.