ரயில்வே துறையில் வேலை வாங்கி கொடுப்பதாக கூறி ஆசிரியரிடம் சுமார் 7.40 லட்சம் ரூபாய் மோசடி செய்த நபரை போலீசார் கைது செய்தனர்.
தேனி மாவட்டத்தில் உள்ள போடிநாயக்கனூர் பகுதியை சேர்ந்த கார்த்திக் என்பவர் தனியார் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் சேலத்தைச் சேர்ந்த ஓட்டுநரான அல்ஜியானி என்பவருடன் நண்பர் மூலமாக கார்த்திக் பழக்கமானார். இவர் ரயில்வே துறையில் டிக்கெட் பரிசோதிக்கும் வேலை வாங்கி கொடுப்பதாகவும் அதற்கு 8 லட்சம் வரை செலவாகும் எனவும் கார்த்தியிடம் ஆசை வார்த்தைகள் கூறி உள்ளார். இதை நம்பி கார்த்தி சென்னை பெரியமேடு ஈ.வி.ஆர் சாலையில் உள்ள பாவா லாட்ஜில் வைத்து 7 லட்சத்து 40 ஆயிரம் வரை கொடுத்துள்ளார்.
குறிப்பிட்ட தேதியில் வேலை வாங்கிக் கொடுக்காததால் சந்தேகமடைந்து கார்த்திக் விசாரித்த போதுதான் தெரிந்தது தான் ஏமாந்தது. எனவே ஆகஸ்ட் 7ம் தேதி பெரியமேடு காவல் நிலையத்தில் கார்த்திக் அல்ஜியானி மீது புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து அலர்ஜியாணியை தேடிவந்த நிலையில் திருவள்ளூரில் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டார். சுமார் 6 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் அவரிடமிருந்து பறிமுதல் செய்தனர். இது போலவே வேறு யாரிடமாவது மோசடி செய்துள்ளாரா என காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.