மத்திய ஆயுஷ் துறை இணையமச்சருக்கு கொரோனா பாதிக்கப்பட்ட நிலையில் அவர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளார்.
இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகமாக பரவிக் கொண்டே வரும் நிலையில். பொதுமக்களை மட்டுமில்லாமல் மருத்துவர்கள், செவிலியர்கள், காவல்துறையினர் உள்ளிட்ட முன்களப் பணியாளர்களும் அதிக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுவருகின்றனர். அதேபோல, எம்.பி, எம்.எல்.ஏக்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுவருகின்றனர். முன்னள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, கர்நாடாக முதல்வர் எடியூரப்பா, மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகிய சமூகத்தில் மிக உயர்ந்த பதவியில் இருப்பவர்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அந்தவரிசையில் தற்பொழுது மத்திய ஆயுஷ்துறை இணையமைச்சர் ஸ்ரீபத் நாயக்குக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால் அவருக்கு எந்த ஒரு அறிகுறிகளும் இல்லை. அதனையடுத்து, அவர், வீட்டிலேயே தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார். இது இதுபற்றி அவருடைய ட்விட்டர் பதிவில், “நான் கொரோனா பரிசோதனை செய்துகொண்டதில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. என்னுடைய உடல்நிலையில் எந்த அறிகுறிகளும் இல்லாததால் நான் வீட்டிலயே என்னை தனிமைப்படுத்திக் கொண்டேன். கடந்த சில தினங்களில் என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் கொரோனா சோதனை மேற்கொள்ளுங்கள்” இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.